தமிழனின் தந்திரம்.! உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள்
Hey guys! இங்க, சிவபெருமான் தாண்டவம் ஆடுற மாதிரி ஒரு பழங்கால சிற்பம் இருக்கு பாருங்க. ஆனா இதுல ஏதோ ஒண்ணு வினோதமா தெரியுது இல்ல? அவருக்கு எத்தனை கால்கள் இருக்குன்னு பாருங்களேன்! மூணு கால்கள். அவரோட கைகளயும் கவனிச்சு பாருங்க! எவ்வளவு கைகள் இருக்குன்னு பாருங்களேன்!ஆமா! மூணு கைகள். இப்ப நாம சிவபெருமானோட இன்னொரு சிற்பத்த பார்க்கலாம் வாங்க. இங்கேயும் அவர் தாண்டவம் ஆடிக்கிட்டு தான் இருக்காரு. ஆனா அவருக்கு இங்கயும் மூணு கால்கள் தான் இருக்கு. ரெண்டு இல்ல, பாருங்க! So, நாம அவர அவரோட கால்கள வச்சு மூணு வேற வேற position ல பார்க்க முடியும் .ஒன்னு, ரெண்டு, இது மூணாவது. ஆனா, மறுபடி கவனிங்க, அவருக்கு மூணு கைகளும் இருக்கு. நீங்க அவரோட கைகள மட்டும் கவனிச்சு பாத்தீங்கன்னா இன்னொரு மூணு வேற வேற கை positions உங்களுக்கு கிடைக்கும்.
இது ஒண்ணாவது, இரண்டாவது, இது மூணாவது. ஆனா கைகளயும் கால்களயும் ஒண்ணா சேர்த்து இந்த சிற்பத்த நீங்க பாக்க ஆரம்பிச்சீங்கன்னா என்ன ஆகும்? நமக்கு கிடைக்கிற result மனச மயக்குற மாதிரி இருக்கு. இது முதல் நாட்டிய position. இது ரெண்டாவது dance posture. மூணாவது position பார்க்க இப்படி இருக்கு. இது நாலாவது position, இது அஞ்சாவது position, இது கடைசியா ஆறாவது position. நமக்கெல்லாம் இது 3 ம் 3 ம் சேர்ந்து மொத்தம் 6 positions. ஆனா ஒருவேள, சிவபெருமான் 3 ஐயும் ஒவ்வொன்னும் மூணு தடவ கூட உபயோகப்படுத்தி இருக்கலாம். So , இந்த மூணு posture கள் ல கூட அவருக்கு நிக்க முடிஞ்சு இருக்கலாம். இது பத்தாதுன்னா, இந்த சிற்பத்த பாருங்க! இது சிவபெருமான, மூணு கால்களோடயும், மூணு கைகளோடையும் மட்டும் காட்டல. இதுல இவருக்கு மூணு தலைகளும் இருக்கு.
இந்த சிற்பத்துல அப்போ உங்களால எத்தன positions அ பாக்க முடியும்? 9?12?18? இப்ப, சிவபெருமான விடுங்க. அவரோட காவல்காரங்கள நாம ஒரு தடவ பாக்கலாம் வாங்க! எப்படி அவருக்கு ரெண்டு பிரம்மாண்டமான காவல் காரங்க, வாயில் காப்பாளர்களா இருக்காங்கன்னு பாருங்களேன். சிவபெருமானோட காவலர நந்தினு சொல்லுங்க. இப்படித்தான் இங்க இந்த நந்திய செதுக்கி இருக்காங்க. ஆனா நீங்க ஒரு இந்துவா இருந்தா என்ன சொல்லுவீங்க? ஒரு நிமிஷம் பொறுங்கப்பா! நந்திய வழக்கமா இப்படி எல்லாம் காமிக்க மாட்டாங்க, அவர வழக்கமா ஒரு எருத போல தான் காமிச்சிருப்பாங்க ன்னு தானே? இப்படித்தான் ஒரு உண்மையான நந்திய செதுக்கி இருப்பாங்க, ஆனா இந்த ரெண்டு காவலர்களும் எருத போலவே இல்லயே? உங்களுக்கு இது நிச்சயமா தெரியுமா? இப்ப கவனமா பாருங்க! நீங்க எருதோட முகத்த அவங்களோட உடம்புல பாப்பீங்க. இது ஒரு ரொம்ப மறைவான, மாயமான Optical illusion.
இந்தக் கோவில பார்க்க வர 99% பேரு இது ஒரு எருதோட முகங்கறத புரிஞ்சுக்கவே மாட்டாங்க. பாருங்க, எப்படி அவங்களோட Nipples அந்த நந்தியோட கண்களையும், அவங்களோட தொந்தி அந்த எருதோட வாயயும் காட்டுற மாதிரி இருக்கு. அதோட கொம்புங்க எப்படி மேல போகுதுன்னு கூட நீங்க பாக்கலாம். அந்த பக்கத்துல இருக்கிற காவலாளி மேலயும் இதே மாதிரி செதுக்கி இருக்கிறத நீங்க பாக்கலாம். நான் இவங்கள நிஞ்ஜா நந்தினு கூப்பிடறேன். ஏன்னா கண்ணுக்கு முன்னாலயே கள்ளத்தனமா, ரகசியமா மறைஞ்சு இருக்குறதுக்கான வழி இது. இத பாருங்களேன்! இதுவும் ஒரு நந்தி தான். இது கிட்டத்தட்ட ஒரு மனுஷன போல இருக்கு. vஆனா இத நாம zoom பண்ணி பார்த்தா, ரெண்டு முகங்கள் இருக்கிறது நமக்கு தெரியும். மனுஷனைப் போல இருக்கிற முகத்து மேலேயே ஒரு எருதோட முகமும் தெரியுது. நீங்க ஒரு மனுசர பாக்கணும்னா ஒரு மனுஷ முகத்த பார்ப்பீங்க.
அதுவே நீங்க ஒரு எருத பார்க்கிறதா நினைச்சு பார்த்தீங்கன்னா ஒரு எருத தான் பாப்பீங்க.vஆனா நீங்க பக்கவாட்டுல பாத்தீங்கன்னா அந்த ஸ்தபதி எருதோட முழு உடம்பையும் அதோட திமிலோடையும் நாலு கால்களோடையும் செதுக்கி இருக்கிறத பார்க்கலாம். So, இது ஒரு நிஞ்ஜா நந்தியோட கண்ண கவர்ற சிற்பம். ஆனா இந்த நந்தி மட்டும் தான் வெளி பார்வையில இருந்து ஒளிஞ்சிகிட்டு இருக்கிற ஒரே நிஞ்ஜா நந்தி ன்னு நினைச்சுடாதீங்க, நீங்க பழங்கால இந்திய கோவில்களுக்குப் போகும்போது எல்லாம் உங்க கண்ணு முன்னாடியே இருக்குற இது மாதிரி நிறைய illusions அ miss பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. பழங்கால ஸ்தபதிகள் மாதிரி இல்லாம இந்த காலத்து மனுஷங்க எல்லாம் ஒரு விஷயத்த பார்த்த உடனே அதுல இருக்கிற மறைவான செய்திய அப்படியே முழுசா 100% கிரகிச்சிக்கிறதுக்கு ஏத்த மாதிரி படைக்கப்படலங்குறது தான் உண்மை.
Praveen Mohan Tamil











