வாணி வித்யாலயா, சென்னை. 15-ஜுலை 2025 அன்று எங்கள் பள்ளியில் கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் காலை 10.00 மணி அளவில் இறைவாழ்த்துடன் தொடங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு முதல்வர் திருமதி. வித்யாவதி அம்மையார் மற்றும் துணை முதல்வர்கள் திருமதி சுமதி அம்மையார் அவர்களும், திருமதி அகிலா அம்மையார் அவர்களும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பேச்சு, பாட்டு, நாடகம், நடனம், பட்டிமன்றம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இவ்விழா தமிழ்த்துறைச் சார்பாக நடத்தப்பட்டது. இறுதியாக 11.00 மணி அளவில் நாட்டுப்பண் பாடி கல்வி வளர்ச்சி நாள் விழா இனிதே நிறைவுற்றது. 🌐