தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை இதுவரை ஆளுநர் தான் நியமித்து வந்தார்.
அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று திமுக அரசு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த புதிய சட்டமசோதா, துணைவேந்தர்களை ஆளும் மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும்.














