நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆதரவு
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு, முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால், வருமான முறைகேடு விவகாரத்தில் அவரை பதவிநீக்கம் செய்யும் முயற்சி வலுவடைந்துள்ளது.
முன்னதாக, யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் தீவிபத்து ஏற்பட்டபோது, மூட்டைமூட்டையாக ₹500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டது.
உலகப் புகழ்பெற்ற நீதிமன்ற அமைப்பில் நம்பிக்கையைப் பாதிக்கக் கூடாது எனக் கூறி, அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ததோடு, அங்கு அவருக்கு எந்தவிதமான பணியும் வழங்க வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது, பார்லிமென்டில் 'இம்பீச்மெண்ட்' தீர்மானத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த தீர்மானம் நிறைவேற, லோக்சபாவில் 100 எம்.பி.க்கள், மற்றும் ராஜ்யசபாவில் 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன், இந்த தீர்மானம் ஜூலை 21 முதல் நடைபெறும் மழைக்காலக் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








