German Tamil Youth Organization Members meeting with a German Parliament Member
Germany.
seen from Greece

seen from United States
seen from T1
seen from China
seen from China
seen from United States

seen from Türkiye

seen from Singapore

seen from Sweden

seen from Malaysia
seen from China

seen from Malaysia
seen from China
seen from China
seen from China
seen from Netherlands

seen from Australia
seen from United States
seen from United States
seen from Netherlands
German Tamil Youth Organization Members meeting with a German Parliament Member
Germany.

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
42 வது இலக்கியச்சந்திப்பு
16.05.2014 மணி 14:00, Neckarsulm பேரூந்துத்தரிப்பிடம்.
அட்டவணைப்படி 13:50 க்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. எனது கைபேசி அதிர்ந்தது, பயணச்சிட்டு வாங்கும்போது, தொடர்புக்கு கைத்தொலைபேசி இலக்கம் கொடுத்தவர்களுக்கு குறும்செய்திகள் வந்தன. பேருந்து வர தாமதம் ஆகுமாம். காத்திருந்த பயணிகள் தவல்களை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
தரிப்பிடத்தில் என்னைப்போலவே சிலர் அங்கு புதியவர்களாக இருந்தோம், அதில் ஒரு கல்லூரி மாணவியும், பொறுமை இழந்து நின்றுகொண்டிருந்தாள். எங்கு Berlin க்கு போகிறாயா? என்று தெரியாமால் பேச்சை நான்தான் தொடக்கினேன். , வார இறுதியில் Würzberg போவாளாம் நான் கேட்காமலேயே தன்னைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டே போனாள். பேச்சுதுணைக்கு பரவாயில்லை பக்கத்திலேயே இருக்கையும் கிடைத்து விட்டால் என்று ஆர்வம் தூண்டியது. 14:30 க்கு வண்டி வந்தது. எப்போதும் மற்றவர்களை ஏற்றிவிட்டு கடைசியாக ஏறும் பழக்கம் கொண்ட நான், இதிலும் அப்படியே ஒதுங்கிநின்று, கடைசியாக வண்டியில் ஏறி, சுற்றுமுற்று பார்த்தபடியே வேகமாக நடந்தேன் . நான் யாரையோ தேடுகிறேன் என்பதை யாரும் கவனிக்கவும் கூடாது. குறிப்பாக அந்த பெண். அவள் கண்ணுக்கு தென்படவில்லை. பின்வருசையில் இருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்து நோட்டம் விட்டேன். தெரிந்ததெல்லாம் விதம் விதமாய் பிடரிகளே. திடீரேனே 5 வருசைக்கு முன்னிருந்து அவள் திரும்பி எனக்கு புன்முறுவல் செய்தாள். ஒன்று நான் தேடியது அவளுக்கு உறுத்தி இருக்கவேண்டும் அல்லது அவளும் என்னை தேடியிருக்க வேண்டும். என்ன இருந்தாலும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை அவளுக்கு அருகிலும் எனக்கருகிலும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. எனது பதில் புன்முறுவலுக்கு பின் அவள் தலையை தன்பக்கம் திருப்பிக்கொண்டாள். இது எனது Berlin க்கான பயணம், 42 வது இலக்கிய சந்திப்பு. காலுக்கடியில் இருந்த எனது முதுகு பையை திறந்து கொலம்பஸின் வரைபடங்களை (யோ.கர்ணன் எழுதிய கதைப்புத்தகம் )எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன். வெள்ளிகிழமை மாலைநேரம் நெடும்சாலைகள் நிரம்பி வழிந்தன. பேருந்து ஊர்ந்தது. பேருந்தில் இருந்த பயணிகளுக்கான 2 திரையில் வரைபடம் ஒன்று, போகும் பாதையை காட்டிய படி அங்கும் இங்குமாய் திசைக்கு ஏற்ப திரும்பிக்கொண்டிருந்தது. செய்மதி மாற்று வரைபடங்களையும் காட்டியபடி இருந்தது. அநேகமாய் இரண்டு மணித்தியாலங்களின் பின் சாரதி ஒலிபெருக்கியில் இன்னும் 10 நிமிடங்களில் Würzberg ஐ அடைந்து விடுவோம் என்று அறிவித்தார் மீண்டும் திட்டமிட்ட நேரத்துக்கு வரமுடியாமைக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். பேருந்து நின்றதும் இறங்கவேண்டிய பயணிகள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்தனர் 5 ஆவது வரிசை யில் இருந்த அவளும் இங்குதான் இறங்க வேண்டும். இறங்கும் போது என்னைப்பார்த்து கை அசைத்து விட்டு இறங்கிச் சென்றாள். புதியவர்கள் ஏறினார்கள். பயணம் தொடர்ந்தது. அடுத்த தரிப்பிடம் Leipzig. இங்கு ஒரு இளைஞர் பட்டாளமே ஏறியது ஒவ்வொருத்தர் கையிலும் பியர் போத்தல் எனக்கருகிலும் ஒருவன் வந்தமர்ந்தான். "நீ யார்? "என்றான் "நான் தமிழன் " "தெரியவில்லை , அது எங்கு இருக்கிறது?" மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் தமிழனை தெரியவில்லை என்றால் இவன் உலக நடப்பே தெரியதவனாகத்தான் இருக்க வேண்டும். " ஸ்ரீலங்கா " "ஒ.! ஸ்ரீலங்கா ... தெரியும்! பியர் குடிக்கிறயா...?" தனது பையில் இருந்து ஒரு பியரை எடுத்து நீட்டினான்., ஓசியில் வருவதை ஏன் விடவேண்டும் என்று வாங்கிக்கொண்டேன். மூடியை திறந்து தந்தான். கொலம்பஸின் வரைபடத்தை இனி வாசிக்க முடியாது. பையில் அதை வைக்க முற்பட்ட போது கையை தடுத்து தமிழ் எழுத்துக்களை உற்றுப் பார்த்தான். நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவனாக இருக்கவேண்டும். தனக்கு வெறி ஏறினால் தன்னுடைய எழுத்துக்களும் இப்படிதான் தெரியும் என்றான். நான் சிரித்தபடியே அப்போ எனக்கு வெறிவந்தால் ... என்று இழுத்தேன் எதோ மிகப்பெரிய பகிடி கேட்டவனாய் சத்தமாய் சிரித்தான். தனக்கு முன்னிருந்த நண்பனுக்கும் காட்டி சிரித்தான். நாளை 17.05.2014 பெர்லினில் DFB CUP இறுதிப் போட்டி Borussia Dortmund க்கும் Bayern München க்கும் நடக்கிறது. எனக்கும் உதைபந்தாட்டத்துக்கும் வேகுதூரமென்ற விஷயம் எனது முகத்தில் எழுதி ஓட்டியிருக்கோ என்னமோ, அவன் பிரயாணத்தின் போது உதை பந்தாட்டத்தை பற்றி என்னுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை நானும் அவனிடம் அதைப் பற்றி கேட்கவுமில்லை அதற்கான அறிவும் என்னிடம் இல்லை.. “Berlin, Berlin, wir fahren nach Berlin” என்று, பாட்டும் ஆட்டமும் பஸ்ஸில் களை கட்டிக்கொண்டிருந்தது . உண்மையில் உதைபந்தாட்ட ரசிகர்கள் கூட்டமாக சேர்ந்துவிட்டால் கலவரம், ஒருத்தருக்கு ஒருத்தர் அடிபட்டுக்கொள்வார்கள் என்பது பொதுவான கருத்து . கடந்த காலங்களில் எனது தொடரூந்து பிரயாணங்களின் போது நிறையவே பார்த்திருக்கிறேன் . பந்தாட்ட ரசிகர்களுடன் சேர்ந்து காவல்துறையும் ஏறிவிடும். இரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து போலீஸ்காரர்களை கலாய்ப்பார்கள்.(கலாய்த்தல் என்பதன் அர்த்தம் தெரியாவிட்டால் அதற்க்கு நான் பொறுப்பில்லை ) அவர்களும் கண்டும் காணாதது போல் அமைதியாக நிற்பார்கள். இதுவே இலங்கை, இந்தியப் போலிசாக இருந்தால் கதைவேற. பெர்லினுக்கு போய்ச்சேர 23:00 மணியாகிவிட்டது. பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்த எனது நண்பன், எனது சகோதரனின் அறைக்கு அழைத்து ச் சென்றான். அறையில் "தென்பாண்டி சீமையிலே தேரோடும் விதியிலே" பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. தொடர்ந்து எண்பதுகளில் வந்த பாடல்கள் . சேர்ந்து பாடினோம், இசை பற்றிப் பேசிக்கொண்டோம். நன்றாக சமைத்திருந்தான். அவன் சமைத்து நான் உண்பது இதுதான் முதல் தடவை. எல்லாமே சைவம்தான், அவனுக்கு மிருகவதைக்கு எதிரான அமைப்புகளுடன் ஈடுபாடு. கிடத்தட்ட 10- 15 வருடங்களாக தனியாகவே வசிக்கிறான். தமிழ் அரிவரி மட்டை ஒன்று சுவரை அலங்கரிக்கும் படங்களில் ஒன்றாக மாட்டப்பட்டிருந்தது. இரவு ஒருமணியாகிவிட்டது. அருகில் இருந்த ஒரு பாருக்கு போனோம். அது ஒரு சிறிய பார், பிரபல்யமானதாக இருக்கவேண்டும். நிறைந்து வழிந்தது. அங்கு எனது சகோதரனுக்கு தெரிந்தவர்களும் இருந்தார்கள் அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்தான். அதில் ஒரு இத்தாலிகாறியும் இருந்தாள். அவளுக்கு ஒரு சந்தேகம். இங்கு ஐரோப்பாவில் பெற்றோருடன் இருக்கும் இலங்கை இந்திய இளம் பெண்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று கேட்டாள். உண்மையில் எனக்கு அவளின் கேள்வி முழுமையாக விளங்கவில்லை, அவளும் மனதில் எதை நினைத்து இதை கேட்கிறாளோ யாருக்கு தெரியும். அனால் ஆண்களைப்போலவே, பெண்களும் தண்ணியடித்தால் நிறையவே கதைப்பார்கள் என்பது மட்டும் விளங்குகிறது. அதிகம் பேசுபவனை எல்லோரும் அறிவார்கள், அதிகம் பேசாதவன் எல்லோரையும் அறிவான். ஜேர்மன் காரர்களைப் போலவே இத்தாலிக் காரர்களும் இனப் பாகுபாடு பார்ப்பவர்கள். பொதுவாக எங்களுக்கு "வெளிநாட்டவர்" என்ற சொல் பெருமையானதாகவும், இங்கு இவர்களுக்கோ அதே சொல் கிழ்த்தரமானதாகவும் இருக்கிறது. "நீ வெளிநாட்டான்" என ஒரு வசைச் சொல்லாகக்கூட அதை பயன் படுத்துவார்கள். முதலாவது போத்தல் Bier தீரும்போது அந்த இத்தாலிக் காரியின் கேள்வியின் நோக்கம் கொஞ்சம் புரிந்தது. ஐரோப்பியப் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாகவும். இந்த ஐரோப்பிய சூழலில் பெற்றோர், மற்றும் ஆண் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் வாழும் இலங்கை இந்திய பெண்கள் துரதிஸ்ட சாலிகள் என்ற கருத்தாக சுற்றிவளைத்துக் கொண்டிருந்தாள். சிலநேரம் நானும் இப்படிக் கட்டுப்பாடு போடுபவனாக இருப்பேன் என்று நினைத்திருக்கலாம் . ஆனால் அவள் என்னிடம் கேட்ட கேள்விபோல் வெய்யில் காலங்களில் சிக்கனஉடை ஜேர்மன்காரிகளுக்கு மத்தியில் பர்தாவுடன் போகும் ஒரு அரபுக்காறியை பார்க்கும்போது எனக்கும் தோன்றும். ஆனால் இந்தச் சுழலிலும் பர்தாவுடன் நடப்பதை பெருமையாக நினைத்தபடி நடக்கும் பெண்களும் நிறைய இருப்பார்கள். தன்னுடைய பண்பாடு சமயம் என்று கருதும் பெண்ணுக்கு அதை அணியும் உரிமையும், இதையே ஒரு அடிமைத்தனம் என்று கருதும் பெண்களுக்கு அதை தூக்கியெறியும் உரிமையும் இருக்கிறது. அவளுக்கு ஒன்று மட்டும் சொன்னேன் தமிழ்ப் பெண்களும் இத்தாலிக் காரிகள் மாதிரித்தான் என்று. அதற்குள் அடங்கியிருக்கும் அர்த்தம் அவளுக்கு புரிந்திருக்குமோ தெரியாது இரண்டு பேரிடமும் பேச்சுக் கொடுத்து தப்ப முடியாதென்று. 650 Km பிரயாணம். உடலில் சிறிது சொர்விருந்தாலும். மனதில் சிறிதும் சோர்வில்லை. விடிந்ததும் 9:30 க்கு Werkstatt der Kulturen, Wissmannstr 32 , 12049 BERLINல். நிற்க வேண்டும். காலை உணவை முடித்து சந்திப்புக்கு போகும்போது 11 :00 மணியாகிவிட்டது. தமிழனையும் நேரக்கடமையையும் சொல்லவாவேண்டும். அதிலும் நான் மிக மோசம். 42 -வது இலக்கியச் சந்திப்பு, எனக்கு முதலாவது சந்திப்பு . சாதியமும் சுயவிசாரணையும் நடந்துகொண்டிருந்தது. இலக்கிய சந்திப்புக்காரர்கள் சரியான நேரத்துக்குத்தான் தொடங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
அங்கு நடந்து கொண்டிருந்த நிர்மலா ராஜசிங்கத்தின் உரையாடலில் இடையில் நுழைந்த எனக்கு எல்லாமே கொஞ்சம் சர்வதேச விசாரணை மாதிரிப்பட்டது. சுத்தி வளைத்து தங்களை தாங்களே உயர்ந்தவர்கள் என்று குறிப்பதில் குறியாக இருந்ததுபோல் பட்டது.
பெரிதாக இருந்த சாதிப்பிரச்சனையை சிறிதாக்கியது இனப்பிரச்சனை. இந்த 30 வருடங்களில் இந்தப்பிரச்சனை மறக்கப்பட்டுக்கூட இருக்கலாம் என்று நினைத்தேன். நான் எனது 23 வருட வெளிநாட்டு வாழ்கையில் இதைப்பற்றி மறந்துபோயே இருந்தேன். இல்லை 30வருடங்கள் போதாது இன்னும் 60 வருடங்கள் நீடித்திருக்கலாம். விடுதலைப் புலிகளும் இலங்கையும் சமபலம் என்று உணரப்பட்ட போது ஒருவருக்கு ஒருவர் கைகுலிக்கி பேசவும் தலைப்பட்டார்கள். தமிழர்களுக்குள்ளே இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் , பொருளாதாரத்தில் கல்வியில் உயரவேண்டும் தாழ்த்தும் தமிழர்களுக்கு சமபலமாக வரவேண்டும். இங்கு புலம் பெயர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழ்ச்சாதியின் வளர்ச்சிக்கு தடை போட யாராலும் முடியாது. இலங்கையில் உள்ள தாழ்த்தப்பட்ட தமிழ்ச்சாதி சமபலம் அடைய வழி பார்க்க வேண்டும். அதற்கான அரசியல் சுழலல் உருவாக வேண்டும். அரசியல் மாற்றத்துக்கு போராட்டமே வழி. போராட்டங்கள் ஏழைமக்களின் வளர்ச்சியை பாதிக்கும், ஏனனில் அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தையும் அவர்களே செய்யவேண்டி இருக்கிறது. அல்லது அவர்களை வைத்துச் செய்யப்படும் ஒன்றாக இருக்கிறது.
எழுத்தாளர் சோபாசக்தி தன்னுடைய புத்தகங்களுடன் சேர்த்து இன்னும் சிலரின் புத்தகங்களையும் பரப்பி வைத்துவிட்டு ஏதொசிந்தனையில் அமர்ந்திருந்தார். மேலே நடந்துகொண்டிருக்கும் உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல்.. இறுதியில் நிர்மலா அவர்களின் உரைக்கு, கலந்துரையாடல் தொடங்கியது. ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களையும் யாழ்ப்பான சாதியம் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில், உணர்ச்சி வசப்பட்டவராய் எழுந்த சோபா தனது பதறும் கைகளை மேசையில் ஊன்றியும், விரல்களை மடித்தும், இடையிடையே தனது நீண்ட தலை முடியை பின்னோக்கி வருடியும் கட்டுப் படுத்த முயற்சிக்கிறார் . இருந்தாலும் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியவில்லை . உடனே கெட்டவார்த்தையால் திட்டியிருப்பரோ என்ற முடிவுக்கு மட்டும் வந்துவிடாதீர்கள். சோபாசக்தியின் தோற்றம் மற்றவர்களுக்கு அப்படித்தான் நினைக்க தோன்றும். முதலில் சம்பந்தமில்லாது போல் இருந்தார் என்று, நான் நினைத்தது கூட பிழைதான். ஆழ்ந்த கிரகிக்கும் சக்தி. நான் சோபாவை சந்திப்பது இதுதான் முதல்தடவை.
தேநீர் இடைவேளையின் போது இருவரும் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தன்னுடைய எழுத்துக்களை வாசித்த அனுபவம் உண்டா என்று கேட்டார் . "ஓம் உங்கட கிட்டடியில் வந்த சிறுகதை ......... " எனது பாழாய்ப்போன மறதி என்னை முந்திக்கொண்டது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அந்த சிறுகதையை வாசித்திருப்பேன். அந்த சிறுகதையின் தலைப்பு ஞாபகத்துக்கு வரவேயில்லை.“ ஏதோ கோடுகள்.., எல்லைகள்….“ என்று இழுத்தேன். மிகவும் சங்கடமான நிலமை.. "என்ன தங்கரேகையா? " „ஓம் அதுதான் அதேதான்.. . உங்கட கொரில்லாவையும் வாசிச்சனான்“ என்றேன். ஷோபாவின் அடுத்த கேள்வி அதை நான் எங்கே வாங்கினேன் என்பதாக இருந்தது. நானும் உடனேயே இன்ரநெட்டில் இறக்கி வாசிச்சனான் என்றேன். இந்தியாவில் ஒரு சினிமா தயாரிப்பாளரிடம், „உங்க படம் திருட்டு வீசிடிலே பார்த்தேன் சூப்பர இருந்திச்சு..!“ என்றால் எப்படி இருக்கும். அப்படித்தான் அவருக்கும் இருந்திருக்க வேண்டும். "உங்களுக்கு புத்தகங்கள் வேணும் எண்டால் பாரிஸ்சில் மலிவாய் எடுக்கலாம் " என்றார். மேலும் இதர விசயங்களை பேசிக்கொண்ட்டோம்.
இடைவேளையின் பின் சந்திப்பு தொடர்ந்தது. என் . சரவணனின் சாதியச்சாடல்கள் என்ற விளக்க உரை சிங்களவர்களுக்குள் இருக்கும் வசைச் சொற்களுக்கு கிரியாவின் தற்கால தமிழ் அகராதி மாதிரி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். .
என்னைப் பாதித்தது ஒன்று ”இடைநிலை” :- விஜயசாந்தனின் திட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை. இந்த தலைப்பை போலவே அவரும் கொஞ்சம் புதிராகத்தான் எங்களுக்கு மதியிலே வந்து நின்றார். எதோ நடனம் ஆடப்போகிறார் என்று நினைத்தேன் முதலில் தனக்கான இடத்தை ஒதுக்கிக் கொண்டார் , தனது பாதங்களால் தரையிலே தட தட வென்று தடிக்கொண்டார் . தன்னை இந்த தரை தாங்குமா ..? என சோதிப்பதுபோல் , தொடர்ந்து சோம்பல் முறிப்பதுபோல் விரல்களை கைகளை நிமித்திக் கொண்டார். தான் செய்வதை தன்னோடு சேர்ந்து செய்ய சொன்னார். ஓ...! உடட்பயிட்சி செய்து காட்டப் போகிறாரோ . கைகளை நிமித்தி, விரல்களை நிமித்தி தலையை இடது பக்கம், வலது பக்கம் என திருப்பி ... ஆம் நான் நினைத்தது சரிதான் போலிருக்கிறது நீண்ட நேரமாக ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறார் போல ... இல்லை எங்களை எதற்கோ தயார் படுத்துகிறார் .. அல்லது எங்களுக்கு இதன் மூலம் எதோ சொல்ல வருகிறார் வலது பக்க உள்ளங்கையில் இடதுகைச் சின்னவிரலால் தட்டுகிறார். நாங்களும் தட்டுகிறோம் விரல் வளைகிறது, இரண்டு மூன்று தடவைக்கு பின் அந்த விரலுடன் மோதிர விரலையும் சேர்த்து மறுபடியும் தட்டுகிறார் , நாங்களும் தட்டுகிறோம் . தொடர்ந்து மூன்றாவதாக நடு விரலையும் நிமிர்த்தி தட்டுகிறார். முனிவர்கள் தவம் செய்யும்போது பிடிப்பார்களே ஞானமுத்திரை அப்படி. அடுத்து சுட்டு விரலையும் நிமிர்த்தி நான்கு விரல்களால் வலது பக்க உள்ளங் கையிலே தட்டுகிறார். நாங்களும் சேர்ந்து தட்டுகிறோம். சத்தம் கொஞ்சம் பலமாக கேட்கிறது. அடுத்தது ஐந்து விரல்கள். எல்லோரும் ஐந்து விரல்களால் தட்டுகிறோம். அதாவது கை தட்டுகிறோம் என்று சொல்லலாம். எங்களுக்கு நாங்களே கைதட்டி பாரட்டுவதுபோல் பலமான சத்தம். ஒரு விரலில் தொடங்கி ஒவ்வொரு விரலாக சேரச் சேரச் சத்தமும் அதிகரிக்க தட்டுதலும் இலகுவாக .... சந்தோசமாக கைகள் தட்டுப் படுகிறது. இப்போது விஜயசாந்தன் விரல்களை தட்டியபடியே மடிக்க தொடங்குகிறார் 5, நாலாகி, நான்கு மூன்றாகி முன்று இரண்டாகி ... ஒலியும் குறைந்து கொண்டு போகிறது. கை அற்புதமான உறுப்பு. எங்களின் அகதி வாழ்கையில் தான் எத்தனை அனுபவங்கள். புரியாத மொழிகளெல்லாம் கைகளால் பேசி புரிய வைத்தோமே, நாவால் பேச முடியாதவர்கள் கைகளால் அற்புதமாக பேசுகிறார்கள். பார்வையற்றவர்கள் கைகளால் தொட்டு உணருகிறார்கள். புல்லாம் குழலை எவ்வளவு அற்புதமாக மீட்டுகிறார்கள் . விஜயசாந்தன் எங்களை தயார் படுத்திவிட்டு தனது உடலியல் அரங்க அளிக்கையை தொடங்குகிறார். தனது முகத்தை வருடுகிறார், கன்னத்தை பித்து எறியமுனைகிறார். .........
ஒரு கட்டத்திலே இரு கைகளையும் இழந்த மனிதன்போல் தனது வாயினால் உடலால் கால்களால், பேசி துள்ளி குதித்து குடித்து, கைகள் இல்லாத மனிதன் தனது தாகத்தை எப்படி தணிப்பான். யாரோ நிரப்பி வைத்த தண்ணீர் குவளையை வாயினால் கவ்வி அண்ணாந்து குடிக்கிறார், ஒரு ரோல் Toilet-paper ருடன் அவர் படும் போராட்டம் என்னை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போய்விட்டது. எனது கமெராவை பிடித்தபடியே அவரை பாக்கிறேன். சுற்றிவர அத்தனை பேர் இருந்தும் அவர் என்னையே உற்றுப் பார்ப்பதுபோல் இருந்தது. தண்ணீரில் தத்தளிக்கும் மனிதனை காப்பாற்றாமல் தனது Smart-Phone இல் படம்பிடித்துக் கொண்டிருக்கும் இக்கால மனிதனாய் என்னை உணர்ந்தேன். ஒதுங்க ஒரு இடமில்லா, வெட்டை வெளியாய் கிடந்த கடற்கரையிலே, மக்கள் வெள்ளத்திலே கைகளை இழந்து கால்களை இழந்து அந்த மக்கள் பட்ட துன்பம் என் கண்முன்னே நனைந்தது. நெஞ்சம் கனக்க என்னால் தொடர்ந்து klick செய்ய முடியவில்லை. உள்ளுக்குளே அழுதபடி இருக்க, சுற்றி இருந்த எங்களில் சிலருக்கு அவர் Toilet-paper ருடன் தரையில் புரண்டு கொண்டிருந்த காட்சி சிரிப்பை உன்டாக்கியிருக்க வேண்டும். அந்த சிலரின் சிரிப்பு வக்கிர புத்தி கொண்ட ஆண்களாகவும் கூனிக்குறுகி நிக்கும் ஒரு நாதியும் அற்ற பெண்ணாக விஜயசாந்தனும் தெரிந்தார்கள். எங்கள் மத்தியிலே இருந்த பற்றிக் பால்ராஜ் எழுந்து அந்த Toilet-Paper ஐ எடுத்து அவரிடம் நீட்டுகிறார். பால்றாஜ்யுக்கும் அவரின் பாடு தாங்க முடியாமல் இருந்திருக்க வேண்டும். நான் வெறுமையாய் பார்த்தபடி இருக்கிறேன். பால்ராஜ் உதவுகிறார் . ஆனால் அந்தப் பேப்பரை கையில்லாத மனிதன் எப்படி பெற்றுக்கொள்வது, தன்னை எப்படி சுத்தம் செய்வது... விஜயன் தனக்கு வலதுபுறமாயும், இடதுபுறமாயும் இருவரை நிறுத்தி தனது தோள்களிலே கைபோடும்படி செய்ய முயற்சிக்கிறார் .
எல்லாமே சைகையும், செய்கையும் தான். கைகளை மட்டுமல்ல வார்த்தைகளையும் இழந்த மனிதன். ஆனால் அந்த மனிதனின் மனதுக்குள் உள்ளதை எப்படி மற்றவர்களால் உணர முடியும். அந்த இவருக்குப் பதிலாக வலது புறத்தில் நானும், இடது புறத்தில் பற்றிக்கும் வியஜனின் தோளில் கைகளைப் போட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. விஜயனின் வலதுகையாக எனது வலது கையும், இடது கையாக பற்றிக்கின் இடது கையும் இணைந்து எல்லோருக்கும் வணக்கம் செலுத்தியிருக்கலாம், விஜயனின் சட்டைப் பொத்தான்களை மூடியிருக்கலாம்.அவரின் முகத்தை எங்களின் இரு கைகளாலும் வருடி இருக்கலாம், விஜயன் ஆரம்பத்தில் தனது உள்ளங்கையில் தன் விரல்களால் தட்டியது போல் எங்கள் இருவரது கைகளாலும் தட்டியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. என்றாலும் அது விஜயனின் மனதோடு, மூளையோடு சேர்ந்து இயங்க முடியுமா ? தலையிலே ஒரு தொப்பியோடு ஒரு நரைத்த தாடிக்காரர் அமைதியாக அமர்ந்திருந்தார். கால் மேல் கால்கொழுவி தனது கையிலே நாடியை ஊன்றியபடி யோசனையில் இருந்தார். அவரின் மனது சிந்தனையிலே மிதக்குமேன்று நினைக்கிறேன். உடலும் அப்படித்தான் மனதோடு மிதக்கக் கூடிய மெலிந்த தேகம். எனது முதுமைக் காலத்தில் அவரைப்போல் இருப்பேனோ என்று நினைக்க தோன்றியது. அந்த மனிதரோடு நான் ஒரு வார்த்தையும் பரிமாறிக் கொள்ளவில்லை. நான் அவரைக் கவனித்தது போலவே அவரும் என்னை கவனித்திருப்பார் என்றே என்மனதும் சொல்கிறது. ஆதவன் கதிரேசபிள்ளை இவரும்ஒரு நாடக கலைஞர் கவிஞர், வன்னியிலே பணிசெய்தவர்.
அகன்ற தோள்களோடு ஒரு இளைஞன், பட்டதாரி மாணவன் மாதிரியான இருப்பு, விரல்களுக்கு நடுவே ஒரு பேனாவை வைத்து சுழட்டிய படி கருத்து வரும் திசையிலேயே கவனமாயிருந்தார். ஒரு வாரத் தாடி, தலைமுடியும் ஓட்ட வெட்டப்பட்டு கறுப்பு நிற T-shirt க்கு மேலே தனது சட்டை தெறிகளை திறந்து விட்டபடி இருந்தார். ஆங்கிலத்தில் நிறைய வாசிப்பவராக இருக்கவேண்டும். பாலியல் அரசியல் பற்றி நெறிப்படுத்தினார் ஹரி ராஜலட்சுமி என்பது அந்த இளைஞனின் பெயர் அவரைப் பற்றி நான் வேறு எதுவுமே அறிந்திருக்கவில்லை , ஆனால் லிவிங் ஸ்மைல் வித்யா என்ற பெண் முன்பு சரவணன் என்ற ஆண், என்ற விபரத்தை விளக்கி ஒரு ஒளிப் படம் திரையிடப்பட்டது
இந்த இலக்கிய சந்திப்புக்கு 1 அல்லது 2 வாரத்துக்கு முதல் "யூரோவிசன் "பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரியாவில் இருந்து Conchita Wurst தெரிவு செய்யப்படார். தான் ஒரு ஆண் பெண் கலவை என்பதை மறைக்காமல் இரண்டுமாகவே பங்குபற்றி அப் போட்டியிலே பரிசும் பெற்று இருந்தார் இதை ஹரியுடன் கதைத்தபோது கூறினேன். கோன்சிட்டா வுர்ஸ்ட்க்கு இருக்கும் அந்த துணிச்சல் வித்தியாவிடம் இல்லை என்றேன். ஹரி அதை தலையாட்டியபடி கேட்டாரே தவிர தனது கருத்தை கூறவில்லை. மிடுக்கான ஒரு இளைஞனாகத் தெரிந்த ஹரியை நான் பின் நாட்களில் முகநூலில் இணைந்து, மேலும் அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. துணிச்சல் என்பதல்ல முக்கியம் மனதுக்கு எது நிறைவைத் தருகிறது என்பதே முக்கியம் அதை தைரியமாக வெளிப்படுத்துவதே துணிச்சல் என்று உணர்ந்தேன். Conchita Wurst க்கு இரண்டுமாயிருப்பது திருப்தியாயிருக்கலாம். வித்தியாவுக்கு பெண்ணாயிருப்பது , ஹரிக்கு தன்விருப்பப்படி. அவரவர்கள் அவரவர் விருப்பப்படி தாங்களாக இருப்பதே சிறப்பு.
நித்தியானந்தன் முத்தையா, நான் முன்பு அறிந்திராத அறிஞர்களில் ஒருவர் நிறைய வாசிப்பார் போல, வாசித்த அத்தனையும் அந்த பெரிய மண்டைக்குள் பதிந்துவிடும் போலிருக்கிறது. தனது மலையக தமிழிலே நிறைய உதாரணங்களை அனுபவங்களை இரசனையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் சிறுவனாக இருந்தபோது, ஐந்து அல்லது ஆறு வயது இருக்குமென்று நினைக்கிறேன். தெரணியகலையில் அந்த மலைகளின் குளிச்சியில் எனது தந்தையோடு நடந்து திரிந்ததும், தலையிலா அல்லது முதுகிலா தொங்குகிறது அந்தப்பெரிய கொழுந்துக் கூடைகள் என ஆச்சரியப்பட்ட நாட்கள் நினைவில் வந்தது. அழகான நீர்வீழ்ச்சிகளை இரசித்ததைவிட வயிற்றிலும் இடுப்பிலுமாக தொங்கிய குழந்தைகள்தான் ஞாபகத்தில் நிற்கிறது. எத்தனையை சுமக்கலாம் எப்படியெல்லாம் சுமக்கலாம் என்ற அந்த சிறுவது அச்சரியங்களை நினைத்துக்கொண்டேன். வேதனைகள் நிறைந்த அந்த மக்கள் இன்னமும் அதே வேதனைகளோடு. துளிர்க்கத் துளிர்க்க கொய்யப்படும் கொளுந்துகளாய், சிறுகச் சிறுக சேர்க்கும் நம்பிக்கைகள். பறித்துப் பறித்துப் பெருத்த கங்காணிகளும், பொய் பொய்யாய் அள்ளித்தரும் எசமாங்களும், அரசியல் சாக்கடைகளும் இருக்கும்வரை எங்கு வளர்வது ஒரு புகைப்படக்காரர் தமயந்தி நல்ல படங்கள் எடுத்திருந்தார் . ஆனால் கூத்து எதாவது செய்வாரா என்பதிலேயே எனது அக்கறை இருந்தது. அப்படி ஒன்றும் செய்யாமல் ஏமாற்றி விட்டார் . என்னைப் பொறுத்தவரை அங்கு வந்த போட்டோ காரர்கள் எல்லோரையும் விட( என்னையும் சேர்த்து) சிறந்த போட்டோகாரர் கீரன் அவர்களே தனது கைத்தொலை பேசியில் அத்தனையையும் எடுத்தார் அதை முக நூலில் பதிவும் ஏற்றினார்.
பிரான்ஸ்சில் இருந்து ஒரு இளைஞன் தான் வரைந்த ஓவியங்களை பரப்பிவைத்து விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். கறுப்பு வெள்ளை ஓவியங்கள் நிறைய வட்டக்கொடுகள் இருந்தன. மரம் அதைச் சுற்றி வட்டங்கள், குகை போன்ற இருள் வட்டங்கள். படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக இருந்தன. அதுதான் இயல்பும் கூட. இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் போல ஓவியர்களும் அவரவர், அவரவர் பணியில், இனம் காணும் வகையில்.
இரண்டு நாட்கள் நடந்த இலக்கிய சந்திப்பில் எந்தநாள் எது நடந்ததென்று எனக்கு இப்பொது ஞாபகம் இல்லை. நான் எனது இரவுகளை எனது சகோதரனின் அறையிலும், எனது நண்பனின் வீட்டிலும் கழிக்க வேண்டியிருந்ததால் சந்திப்புக்கள் நிறைவடைவதற்கு முன்பே போகவேண்டியும் இருந்தது. காட்டப்பட்ட குறும்படங்களை முழுமையாக பார்க்க முடியவில்லை. இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமை இலக்கிய சந்திப்புக்கு செல்வதற்காக "U-Bahn" நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மழை, ஒதுங்க மனமின்றி வேணுமென்றே மழையில் நனைந்தேன். அதில் கூட நான் முழுமையாக நனையவில்லை. ஆகக் குறைந்தது எனது முகம் நனைய வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக கண்கள் குளமாகின. அதை மறைக்க அந்த மழை உதவியது. மனம் ஒரு குரங்குதான் அங்கும் இங்குமாய் தாவிக்கொண்டிருந்தது. எதையுமே திட்டமிடாமல் அந்தந்த கணங்களை அனுபவிக்கிறேன். தருணங்களை சாதகமாக்கப் பார்கிறேன். இங்கேயும் இலக்கியச் சந்திப்பு பற்றிய எனது பதிவு, என்னைப் பற்றிய பதிவாகவே இருக்கிறது. எங்கோ தொடக்கி, எதைஎதையோ கிறுக்கி அரைகுறையாய்..., இல்லை. பேருந்தில் எனது இரண்டு நாள் தூக்கத்தையும் நான்றாக சேர்த்து தூங்கினேன். பேச்சுத்துணைக்கு யாரையும் தேடாமல் கனவில் மிதந்தேன்.