தை - திருமகளே வருக வருக...
தைரியம் துணிவு சிறக்க வருக வருக...
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக...
தைத்தியரை அழிக்க வருக வருக...
முற்றத்தில் கோலமிட்டு...
முக் - கல் அடுப்பு வைத்து...
முத்திரி விளக்கேற்றி...
முக்குணத்தை அழிக்க...
முக்காலமும் சிறப்பாக அமைய...
கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன்...
தை- திருமகளே வருக வருக...
உன்னையே உயிராய்...
உன்னையே தொழிலாய்...
உன்னையே மூச்சாய் வாழும்...
உன்னையே தெய்வமாய்...
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே...
தை- திருமகளே வருக வருக...











