சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லவிருந்த மின்சார இரயில், சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடை மீது ஏறி நின்றது. இதனால் பயணிகள் தப்பி ஓடினர்.
செங்கல்பட்டு செல்லவிருந்த மின்சார இரயில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து, இரயில் தடுப்பின் மீது மோதி பயணிகள் செல்லும் நடைமேடை மீது ஏறியது.









